• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செப்டம்பர் 15 மனிதச் சங்கிலிப் போராட்டம் ஏன்? – கோவை எம்பி.பி.ஆர்.நடராஜன் விளக்கம் !

September 14, 2021 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில்,

புனேவுக்கு அருகில் பீமா நதிக்கரையில் உள்ள கொரேகான் என்ற இடத்தில் 1818 ஜனவரி 1அன்று பேஷ்வா படையினரை வெற்றிகொண்டனர்.அவ்வெற்றியை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 1 அன்று பீமா கொரேகானில் கூடி வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.

அதன் இருநூறாவது ஆண்டு கூடுகைக்குப் பிறகு இவ்வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சாதாரண இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கூட வழக்குப் பதிவு செய்ய எந்த குற்ற முகாந்திரமும் இல்லாத நிலையில் கொடூரமான ‘உபா’ (UAPA) சட்டம் பதிவு செய்யப்பட்டது.இதில் சிறையில் இருந்த அருட்தந்தை ஸ்டான் சுவாமி உரிய மருத்துவ சிகிச்சை இன்றி 05.07.2021 அன்று சிறையிலேயே இறந்தார்.

கைது செய்யப்பட்ட 15 பேரும் இப்பொழுதும் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கியே சிறையில் இருக்கிறார்கள்.சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் அறிவார்ந்த ஆளுமைகள், மக்களுக்காக பேசியவர்கள், எழுதியவர்கள், செயல்பாட்டாளர்கள்

இவர்களின் மடிக்கணினியில் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய கடிதங்கள் இருந்தன என்றும் அது தான் வழக்குகளுக்கு அடிப்படை ஆதாரம் என்கிறது தேசிய புலனாய்வு முகமை (NIA). ஆனால் இது திட்டமிட்ட சதி என்பது இப்பொழுது வெளிப்பட்டுள்ளது.திட்டமிட்ட சதிஎன்று நிரூபிக்கப்பட்டாலும் அவர்களுக்கு பிணைகூட வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு கொடுமைப்படுத்தி வருகிறது.

சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் முக்கியமானவர்கள் என்றாலும் இந்திய மக்களோடு உணர்ச்சிப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பேத்தி ரமாவின் கணவர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என சர்வதேச ஜனநாயக தினமான செப்டம்பர் 15 அன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.

மனித உரிமைக்கான இந்த மகத்தான மனித சங்கிலியில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தபெதிக, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட 23 அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளது.கோவையில் காந்திபுரத்தில்
நடைபெறும் இவ்வியக்கத்தில் நாட்டின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க, ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்த வெகுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் தபெதிக பொது செயலளர் கு.இராமகிருட்டிணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் யு.கே.சிவஞனம், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் அஷ்ரப்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க