September 14, 2017 தண்டோரா குழு
செப்டம்பர் 20-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது, விசாரணையின் போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் “ தி.மு.க.,வை சேர்ந்த 21 மற்றும் அதிமுக எம்.எல்.ஏ,.க்கள் 19 பேர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது.தகுதி நீக்கம் செய்துவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க முயற்சிகள் நடக்கிறது,” என்றார்.
இதனையடுத்து செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.