September 1, 2017 தண்டோரா குழு
செப் 5-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயப்படுத்தப்படாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.அசல் ஓட்டுநர் உரிமம் உள்ளாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கபடும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில்,இதுகுறித்த வழக்கு ஓன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று நீதிபதி துரைசாமி கருத்துத் தெரிவித்தார்.
மேலும், திடீரென்று இப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் நீதிபதி துரைசாமி கூறினார். மேலும், வாகனச் சட்ட பிரிவு 139-ன்படி ஓட்டுநர்கள், அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்தது. அப்போது செப் 5-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயப்படுத்தப்படாது’ என்றும் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.