January 10, 2017 தண்டோரா குழு
செயல்படாத வங்கிக் கணக்குகளில் ரூ.25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, வருமானவரித் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது:
“2௦16 நவம்பர் 8ம் தேதி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசாங்கம் அறிவித்தது. அதன் பிறகு வங்கிகளில் மட்டும் கணக்கில் வராத 3 முதல் 4 லட்சம் கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பண மதிப்பிழப்பு அறிவிக்குப் பிறகு 60 லட்சம் வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 9 ம் தேதி முதல், வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.10,700 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பல கணக்குகளில் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. செயல்படாத வங்கி கணக்கில் மட்டும் ரூ. 25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.