March 21, 2017
தண்டோரா குழு
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவன் என்றழைக்கப்படுபவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டனியின் காமெடி இன்று வரையிலும் எல்லோர் மனதிலும் நங்கூரம் போல நச்சென்று பதிந்துள்ளது.
சினிமாவில் இவரது காமெடி எப்படி கலக்கலாக இருக்குமோ அதைவிட அதிகமாகவே நிஜவாழ்விலும் இவரது காமெடி இருக்கும். ஸ்க்ரீனுக்கு வெளியே அவர் செய்யும் சேஷ்டைகள் இன்னும் ஏராளம்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கவுண்டமணியை பார்த்த ரசிகர் ஒருவர், உற்சாகத்தில் அவரிடம் செல்பி எடுக்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி, முன்னால் கையை நீட்டி, அங்கே யாருமே இல்லை, போய் எடுத்துக்கோ என்று கூறியுள்ளார்.
ரசிகரும் அவர் சொன்ன இடத்தில் சென்று செல்பி எடுத்து அதை பேஸ்புக்கில் சேர் செய்துள்ளார்.