June 3, 2017
தண்டோரா குழு
திருவாரூரில் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது போன் வெடித்துச் சிதறியதில் சச்சின் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர் சச்சின். இவர் திருவாரூர் அருகே உள்ள தனது உறவினர் குணசேகரன் என்பவரின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவாரூர் அருகே முகந்தனூர் என்ற இடத்தில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது உயர்ரக (ஆப்பிள்)செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தீடிரென செல்போன் வெடித்துச் சிதறியது. இதில் அவருக்கு முகம், தாடை,கன்னம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.