July 19, 2022 தண்டோரா குழு
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியானது தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பிரதான அலுவலகம் டவுன்ஹால், அனைத்து மண்டல அலுவலகங்கள், வஉசி பூங்கா, வஉசி மைதானம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, பன் மால், டைடல் பார்க், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் நடைபெறுவது குறித்த விளம்பர எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.