March 8, 2023 தண்டோரா குழு
சேரன் நர்சிங் கல்லூரியில் ”இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி போர் ஜெண்டர் இக்குவாலிட்டி” என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மகளிர் தினவிழா இன்று நடைபெற்றது.கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாகுமாரி தலைமை தாங்கினார்.
தற்போதைய டிஜிட்டல் உலகில் அதிகரித்து வரும் பாலின இடைவெளி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, விழாவின் சிறப்பு விருந்தினர் ”புட் பேங்க் கோவை” நிறுவனர் வைஷ்ணவி.கே.பி மாணவர்களிடம் விவரித்தார். மேலும், தொழில்நுட்ப துறையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அத்துறையில் பெண்களின் முக்கியத்துவம் போன்றவற்றை மாணவர்கள் மத்தியில் விரிவாகப் பேசினார்.
அவரை தொடர்ந்தது, ஐஸ்வர்யா ஃபெர்ட்டிலிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டின் தலைமை ஆலோசகர், பேராசிரியர் வி.பி. சௌந்தரி அவர்கள், சமூக முன்னேற்றத்திற்குப் பெண்களின் பங்கு, பெண்களின் திறன் மற்றும் வளர்ச்சி உள்ளிட்டவற்றை விரிவாக மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவில், நடனம், குறும்படம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை நன்கு வெளிப்படுத்தினர். அதிலும், சமூகத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான ஆசிட் வீச்சு உள்ளிட்ட வன்கொடுமைகளை தத்ரூபமாக தங்களின் நடனம் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.