March 21, 2022
தண்டோரா குழு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் நீதி மய்யத்தினர் “லஞ்ச ஊழலைக்கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகப் பெற்றிட வழிவகுக்கும் சேவைபெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
மனு அளிக்க வந்த அவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த கடிகாரத்தை அட்டைகளை எடுத்து வந்தனர்.இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் அரசு அலுவலகங்ககுக்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், லஞ்சம் கொடுத்துதான் அரசு சேவைகளை பெறக்கூடிய சூழல் உருவாவதாகவும், இதன் பின் புலத்தில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழக்கத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தற்பொழுது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசாங்கம் இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.