• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சொட்டு நீர் பாசனம் அமைக்க1215 எக்டர்நிலம் இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது

September 9, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் வேளாண்பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க நடப்பாண்டிற்கு 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஎன கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க நடப்பாண்டிற்கு கரும்பு190 எக்டர், பருத்தி 25 எக்டர், தென்னை 500 எக்டர், மக்காச்சோளம் மற்றும் இதர பயிர்களுக்கு 100 எக்டர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்துக்கு 400 எக்டரும் சேர்த்து மொத்தம் 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அவர் தெரிவித்ததாவது,
“வறட்சி காலங்களில் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், பயிரின் வேர்களுக்கு அருகிலேயே நீரை பாய்ச்சுவதால் களைகளை கட்டுப்படுத்திடவும், ஆட்கள் பற்றாக்குறையை குறைத்து அதிக மகசூலை அடைந்திடவும் சொட்டுநீர் பாசனம் இன்றியமையாததாகும்.

விவசாயிகள் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்வதன் மூலம் நீர்த்தேவையை குறைத்து அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்வதற்காக நிலையான கரும்பு சாகுபடி திட்டம் வேளாண்மை துறையின்மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் ஒருவிதை பருக்கள் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக நிழல் வலை கூடம் அமைப்பதற்கு மானியம், அலகு ஒன்றிற்கு ரூ.75000 வழங்கப்படும். ஒரு விதை பருக்கள் மூலம் கரும்பு சாகுபடி செய்வதற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4500 என்ற விகிதத்தில் 6000 பருக்கள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் மானியம் வழங்கப்படவுள்ளது.

இதில் ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தங்கள் பகுதி கரும்பு அலுவலர்கள் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், சிட்டா, அடங்கல், நில உரிமைச்சான்று, ரேஷன்கார்டு, ஆதார்எண், நீர் ஆய்வு அறிக்கை மற்றும் சிறுகுறு விவசாயி சான்றுடன் (சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும்) வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் அந்தந்த, பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.”
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க