April 5, 2022 தண்டோரா குழு
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கம் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.இதனால், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படையும்.கடந்த இரண்டு வருடங்களாக தொழில்துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.தொழிலாளிகள் வேலை இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
வியாபாரிகள் கடுமையான வீழ்ச்சி கண்டு உள்ளனர்.மக்கள் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், வரி உயர்வால் நகர்புற பகுதியில் வீட்டு வாடகை உயர்த்தப்படும். தமிழகம் முழுவதும் வாடகை கட்டிடத்தில் இயங்கும் குறு சிறு தொழில் முனைவோர்களின் கட்டிடங்களின் வாடகை உயர்த்தப்படும்.எனவே, மக்களின் நலன் கருதி சொத்து வரி உயர்வை அரசு ரத்து செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.