• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சோமாலியா தீவிரவாத தாக்குதலில் 7 பேர் பலி

January 25, 2017 தண்டோரா குழு

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல விடுதி மீது புதன்கிழமை(ஜனவரி 25) அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து சோமாலியா நாட்டின் காவல்துறை அதிகாரி முஹமது ஹுசைன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

“மொகடிஷுவில் உள்ள பிரபல விடுதியில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவத்தின்போது அந்த விடுதியில் வழக்கறிஞர்கள் சிலர் தங்கி இருந்தனர்.

அவர்கள் நிலைமை குறித்து எந்த தகவலும் இல்லை. இச்சம்பவத்திற்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் தான் காரணம். அவர்களுடைய பிரதான கோட்டைகள் அகற்றப்பட்ட போதிலும், அவர்கள் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் கொடிய தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க