December 25, 2021 தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஒமைக்கிரான் பரவல் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.தடுப்பூசிதான் கொரோனா பரவல் தடுப்பதற்கான பேராயுதம். இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கையில் தயாராக உள்ளது.கடும் சவால்களுக்கு இடையே தடுப்பூசி திட்டம் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க அனைத்து வசதியும் செய்யப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 90 ஆயிரம் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மூக்கு வழியாக செலுத்தும் மருந்துகள் விரைவில் அறிமுகம்.உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில் வர உள்ளது.கோவா, உத்தரகாண்டில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும்.
நாட்டில் இதுவரை 90% மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை 60% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.