September 25, 2017 தண்டோரா குழு
ஜப்பானின் ஒசாகா நகரின் மீது பறந்துக்கொண்டிருந்த கேஎல்எம் விமானத்தின் இறக்கை பகுதி உடைந்து விழுந்ததில், கார் முழுவதும் சேதம் அடைந்தது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கேஎல்எம் ராயல் டட்ச் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் ஆம்ஸ் டர்டாமுக்கு செல்ல, அமெரிக்காவின் கன்சாஸ் சர்வதேச விமானநிலையத்திலிருந்து, சுமார் 3௦௦ பயணிகளுடன் புறப்பட்டது.
ஆனால், எதிர்பாராதவிதமாக ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரின் மேல் பறந்துக்கொண்டிருந்தபோது, 4 கிலோ எடையுடைய இறக்கையின் ஒரு பகுதி, உடைந்து சுமார் 2௦௦௦ மீட்டர் உயரத்திலிருந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது விழுந்தது. காரின் மீது விழுந்த வேகத்தில், அதன் கூரை நொறுங்கி, அதன் கண்ணாடிகள் சிதறின. கார் முழுவதும் சேதம் அடைந்தது.
இறக்கை உடைந்த சேதம் அடைந்த அந்த விமானமும் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆம்ஸ்டர்டாம் விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.