January 19, 2017
தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.டி. ஊழியர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த “கொவீனன்ட் கன்சல்டன்ட்ஸ்” நிறுவனம் வியாழக்கிழமை ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளது.இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ஜோசுவா மதன் விடுமுறை அறிவித்துள்ளார்.
தனது நிறுவன ஊழியர்கள் 500 பேரும் ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக விடுமுறையை அறிவித்த அவர், “ஒரு நாள் வருமானத்தை விட எனது மக்களின் போராட்டம்தான் எனக்கு முக்கியம்” என்று அவர் கூறியுள்ளார்.