January 19, 2017
தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும் பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்போராட்டம் குறித்து நட்சத்திர சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாகப் போராடுகின்றனர். தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாசார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.