July 6, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் மிருகவதை நடைபெறுவதாக கூறி விலங்குகள் நல அமைப்புகளின் முயற்சியால் காளைகள், காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.இதனால், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இதையடுத்து இந்தாண்டு இளைஞர்கள் மற்றும் மக்களின் மாபெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழக சட்டசபையில் இதுதொடர்பாகச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜனவரி பிப்ரவரியில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சியாக நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது பீட்டா அமைப்பு 2017-ல் நடந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக ஆதாரத்தோடு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், மிருகவதைக்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் தாக்கல் செய்துள்ளது.
மேலும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் பீட்டா மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புதிய சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.