January 20, 2017
தண்டோரா குழு
தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வருவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனே தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கையில் குறுக்கீடாமல் இருக்க ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்குத் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி ஜல்லிக்கட்டு வழக்கில் இப்போதைக்கு தீர்ப்பளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு வாரத்திற்கு எவ்வித தீர்ப்பும் வழங்கக் கூடாது. தமிழக அரசின் நடவடிக்கையில் நீதிமன்றம் குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.