May 27, 2017 தண்டோரா குழு
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்53வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
1889ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி, அலகாபாத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்தார். இந்திய விடுதலை போராட்டத்தின்போது முக்கிய பங்கு வகித்தார். 1919ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1923ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச்செயலாளர் ஆனார்.
இந்தியாவிற்கு அரசியலமைப்புக் கோரி கையெழுத்திடவர்களில் நேருவும் ஒருவர். இந்த அறிக்கை 1928ம் ஆண்டு அனைத்துக் கட்சி மாநாட்டில் முன்மொழியப்பட்டது. இந்த அறிக்கைக்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவின் பெயர் வைக்கப்பட்டது.
பின்னர், ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் கூடத்தின் தலைவர் ஆனார். மகாத்மா காந்தி அழைப்புவிடுத்த சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். 193௦ முதல் 1935ம் ஆண்டுகளில் அவர் பல முறை சிறை சென்றார்.
குழந்தைகள் மீதி அதிக அன்புக்கொண்டவராக இருந்தபடியால், அவருடைய பிறந்த நாளை “குழந்தைகள் தினமாக” கொண்டாடப்படுகிறது. 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்திய விடுதலை அடைந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கபட்டார். 1946ம் ஆண்டு, மே 27ம் தேதி காலமானார். அவருடைய இறப்பு வரை சுதந்திர இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார்.
இதனியடுத்து “பண்டிட் ஜவஹர்லால் நேருவின் இறந்த நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பிரதமர் மோடி, தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.