July 21, 2017 தண்டோரா குழு
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40ம் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி இன்று Jio Future Phoneஐ அறிமுகம் செய்தார்.
ஜியோ போன், வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ போன் வாங்குவோர் ரூ.1,500 மட்டும் செலுத்தி போனை வாங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகை திரும்ப வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என அந்நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் 1௦௦கோடி வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் வசதி வழங்கும் நோக்கில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜியோ போனின் சிறப்பம்சங்கள் 4ஜி, வாய்ஸ் கமான்ட்வசதி, எண் 5 அழுத்தி அவசர எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி, 1௦௦க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கக்கூடிய வசதி, வங்கி சேவைகளை இயக்கும் வசதி என பல உள்ளது.
ஆகஸ்டு 15 முதல் பீட்டா சோதனை முறையில் இந்த போன் வழங்கப்படுகிறது. அதன் பின் ஆகஸ்டு 24 -ம் தேதி முதல் ஜியோபோன் வாங்க முன்பதிவு செய்ய வேண்டும்.