April 9, 2022 தண்டோரா குழு
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதனை அடுத்து தற்போது ஜி.என். மில்ஸ் மேம்பால பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்பம் மூலம் கான்கிரீட் போடும் பணி உள்ளிட்டவை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் இப்பணிகளில் அனைத்தும் நிறைவடையும்” என்றார்.