August 21, 2023 தண்டோரா குழு
பல நிறுவங்களுக்கு முன்னோடியாக விளங்கும் அகுக்லான் வாட்டர் பியூரிஃபையர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Aguaclan Water Purifiers Private Limited) இன்று ‘ஜீரோ பி ஹைட்ரோலைஃப்’ (‘Zero B Hydrolife’) நிறுவனத்தோடு இணைந்து புதிய தண்ணீர் சுதாகரிப்பானை அறிமுகப்படுத்தியுள்ளது.
அகுக்லான் வாட்டர் பியூரிஃபையர்ஸ் கோவை மாவட்டத்தில் முதல் முறையாக சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அழகேசன் சாலையில் தனது முதல் ஷோரூமை துவக்கியுள்ளது.
இதன் துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக காவேரி குரூப் ஆஃப் கம்பெனிஸ் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் மற்றும் கௌரவ விருந்தினராக கார்ப்பரேட் லீகல் அட்வைசர்
கே.என் பாலா ஆகியோர் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தனர். தொடர்ந்து,அகுக்லான் வாட்டர் பியூரிஃபையர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இது குறித்து, அகுக்லான் வாட்டர் பியூரிஃபையர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,
‘ஜீரோ பி ஹைட்ரோலைஃப்’ (Zero-B Hydrolife) இயந்திரம் ஒரு மருத்துவ சாதனமாகவே கருதப்படுகிறது. இந்த புதுமனையான சாதனம் மக்கள் மனதில் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும்.அகுக்லான் (Aguaclan) நிறுவனர் குருசாமி 1993 ஆம் ஆண்டு Prime Power systems என்கிற நிறுவனத்தை துவக்கி தொழிலதிபராக கால்பதித்தார்.2012 ஆம் ஆண்டு கெல்பி (Kelby) என்கிற நிறுவனம் நிறுவப்பட்டு பின்பு அது 2017 ஆம் ஆண்டு Aguaclan ஆக பரிணாமம் பெற்றது.
கோவை கவுண்டம்பாளையத்தில் சுமார் 8500 சதுர அடி பரப்பில் தங்களது உற்பத்தி கூடத்தை வைத்து சோமையம்பாளையத்தில் தலைமை அலுவலகமாக கொண்டு செயல் பெற்று வருகிறது.தினமும் நூற்றுக்கணக்கான Stainless Steel தண்ணீர் சுத்திகரிப்பானை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்வதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியும் செய்துகொண்டு வருகிறது.
இதோடு நின்று விடாமல் ஆராச்சி மற்றும் மேம்பாட்டு கூடம் அமைக்கப்பட்டு அறிய தொழில் நுட்பத்தோடு புதிய இயந்திரங்களை தயாரித்து கொண்டு இருக்கிறது.அதற்கு எடுத்துக்காட்டாக சூரிய ஒளி கொண்டு Water ATM, தண்ணீர் தானியங்கி இயந்திரம் என்று புதிய புதிய பரிமாணத்தை சமூகத்திற்கு தந்து கொண்டே இருக்கிறது.அகுக்லான் ‘ஜீரோ பி ஹைட்ரோலைஃப்’ பியூரிஃபையர்ஸ் (Aguaclan Zero B Hydrolife) நன்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமைத்ததாக உள்ளது.உணவு,தண்ணீர் மற்றும் தூக்கம்.இவற்றில் தண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எங்களது நிறுவனம்’ஜீரோ பி ஹைட்ரோலைஃப்’என்ற புதிய வாட்டர்
பியூரிஃபையர்ஸ் இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம்.பொதுவாக ஆரோ வாட்டரில் பி.எச் குறைவாக உள்ளது. இதனால் மனிதர்களின் செல்களில் ஆக்சிஜன் குறைவாகவும் உடல் ஆரோக்கியம் குறைந்தும் காணப்படுகின்றது.
அறிவியல் தொழில்நுட்பம் மூலம் ஹைட்ரோலைப் என்ற புதிய வாட்டர் பியூரிஃபை இயந்திரம் மூலம் தண்ணீரில் ஆக்ஸிஜன் உடன் கூடிய பி எச் அதிகம் உள்ளதை நிரூபித்து உள்ளோம். இதன் மூலம் உடல்களின் செல்கள் சீராகவும் உடல், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு ஹைட்ரோ லைஃப் பியூரிஃபையர்ஸ் வாட்டர் உதவுகிறது என தெரிவித்தார்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில்,
அகுக்லான் வாட்டர் பியூரிஃபையர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் குருசாமி, மார்க்கெட்டிங் டைரக்டர்
காலின்ஸ் ரோட்ரிக்ஸ், நிர்வாக இயக்குனர் நந்தினி காலின்ஸ்,ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தலைவர் தினேஷ்குமார், மனித வளம் மேலாளர் காருண்யா ஜான் மற்றும் அகுக்லான் வாட்டர் பியூரிஃபையர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.