• Download mobile app
08 Jan 2025, WednesdayEdition - 3255
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று கோவை மாணவி சாதனை !

January 7, 2025 தண்டோரா குழு

2024 ஆம் ஆண்டுக்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் (Junior National Equestrian Championship – 2024) போட்டியானது டிசம்பர் 26 முதல் 30 வரை டெல்லியில் உள்ள ஆர்மி ஈக்வஸ்டிரியன் சென்டரில் நடைபெற்றது.

இப்போட்டியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் Alexander Equestrian Club – Equine Dreams ஐ சேர்ந்த 11 வயது மாணவி ஹாசினி Indigenous Horse Society – Tamilnadu மூலம் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி அனுப்பப்பட்டார்.

மேலும் போட்டியில் கலந்து கொண்டு அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை பெற்று தமிழகத்தை பெருமைப்படுத்தினார். 60cm பிரிவில் வெவ்வேறு குதிரைகளில் போட்டியிட்டு தங்கம் வெள்ளி மற்றும் நான்காவது இடத்தை வென்றுள்ளார். 80cm பிரிவில் மூன்றாவது இடத்தை வென்றுள்ளார்.

மேலும் குழு விளையாட்டு பிரிவான JNEC Children II Dressage மற்றும் JNEC Children II Show jumping பிரிவில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கங்களையும்(8),JNEC Children II Show jumping 2 phase பிரிவில் இரண்டாம் பரிசான வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

ஹாசினி கடந்த ஐந்து ஆண்டுகளில் பலவிதமான குதிரைகளை சவாரி செய்து ஒவ்வொரு குதிரையின் குணாதிசயங்களை புரிந்து கொண்டு அதிலிருந்து கற்றுக் கொள்ளும் திறனை பெற்றுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியே ஹாசனியின் முதல் தேசிய அளவிலான போட்டியாகும்.

அவரின் தலைமை பயிற்சியாளர் சக்தி பாலாஜியின் வழிகாட்டுதலும் அவர் அளித்த கடுமையான பயிற்சியும் ஹாசினியை ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்று தேசிய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வழி வகுத்தது. ஹாசினி தனது வெற்றியை தலைமை பயிற்சியாளர் சக்தி பாலாஜி மற்றும் Alexander Equestrian Club – Equine Dreams குழுவிற்கும் அர்ப்பணித்தார்.

மேலும் இப்போ போட்டியில் பங்கு பெற செய்த Indigenous Horse Society – Tamilnadu அமைப்பிற்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

மேலும் படிக்க