June 5, 2017 தண்டோரா குழு
குறிப்பிட்ட சில மொபைல் போன்களில் ஜூன் 30 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயல்படாது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் அதிக மக்களால் பயன்படும் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் தினசரி அனைவராலும் தகவல் தொடர்புக்கு பயன்பட்டு வருகிறது. பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் அப், அதன் பயன்பாட்டில் பல மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது.
சமூக வலைதளமான வாட்ஸ் அப் ஜூன் 30ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில மொபைல் போன்களில் செயல்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பழைய மாடல் மொபைல் போன்கள் மற்றும் குறிப்பிட்ட சில ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட மொபைல் போன்கள் போன்றவற்றில் வாட்ஸ் அப் செயல்படாது. அதன்படி கடந்த 2016இல் வெளிவந்த ஒரு சில பிளாக்பெர்ரி, விண்டோஸ், ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்ற தளங்களில் செயல்படும் வாட்ஸ் அப் செயலி, ஜூன் 30க்கு மேல் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30க்கு மேல் வாட்ஸ் செயல்படாத மொபைல் போனின் மாடல்கள்:
பிளாக் பெர்ரி 10
நோக்கியா S40
நோக்கியா Symbian S60,
ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2
விண்டோஸ் 7.1 மொபைல்
ஐபோன் 3 3GS/iOS 6
மேலே குறிப்பிட்டுள்ள மாடல்கள் கொண்ட மொபைல் போன்களில் வாட்ஸ் அப் சேவை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பாதுகாப்பை அதிகரிக்க வாட்ஸ் அப் புதிய அப்டேட்டுடன் செயல்பட்டு வருவதால், பழைய இயங்குதளம் கொண்ட மொபைல் போன்களில் வாட்ஸ் அப் சேவை அளிக்க முடியாது என வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.