July 11, 2023 தண்டோரா குழு
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை அதனுடைய முக்கிய வருடாந்திர நிகழ்வான ‘உழவே தலை’ எனும் வேளாண் கருத்தரங்கை ஐந்தாவது ஆண்டாக CODISSIA AGRI INTEX – 2023 உடன் இணைந்து 15 ஜூலை 2023 சனிக்கிழமையன்று கோயம்புத்தூர், அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் உள்ள ஹால் F, முதல் மாடியில் நடத்துகிறது.
இந்த ஒரு நாள் வேளாண் கருத்தரங்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும். இந்த கருத்தரங்கு பயிர் பல்வகைப்படுத்தல், சிறுதானியங்களின் மதிப்பு கூட்டல், விவசாயம் சார்ந்த கார்பனின் நற்பயன்கள் மற்றும் மசாலா பொருட்களின் செயலாக்கம் மற்றும் எற்றுமதி சாத்தியங்கள்.விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதவர்கள் மரங்கள் மற்றும் மலர்கள் அறுவடை போன்ற விவசாயப் பொருட்களின் மதிப்பு கூட்டல் மற்றும் பிற கருத்துக்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.
பழங்களை வளர்ப்பதற்கான வளர்ந்த பயிற்சி மாதிரிகள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குதல் மற்றும் வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டல் போன்றவற்றை கற்றறிந்த பேச்சாளர்கள் விரிவாக எடுத்துரைப்பார்கள். டாக்டர் கருணாகரன் கணேசன், முதன்மை விஞ்ஞானி, ICAR, பெங்களூரு, அதிக மதிப்புள்ள பழ பயிர்கள் மூலம் பல்வகைப்படுத்தல் உத்திகள் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.
டாக்டர் ராம் ராஜசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், நுண்ணுயிரியல் துறை, ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்ஸ், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர், மசாலா பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியின் சாத்தியங்கள் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.பேராசிரியர் எம்.லோகநாதன், இயக்குநர் (i/c), தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை (NIFTEM) – தஞ்சாவூர், சிறுதானியங்களின் மதிப்பு கூட்டல் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
கவின் குமார் கந்தசாமி, தலைமை நிர்வாக அதிகாரி, ப்ரோக்லைம் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, அவர்கள் விவசாயம் சார்ந்த கார்பனின் நற்பயன்கள் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.என் மணிசுந்தர், இயற்கை விவசாயிகள் மற்றும் உழவே தலைக்கான எங்கள் ஆலோசகர் கருத்தரங்கின் முடிவில் நெறிப்படுத்துவார். பழங்கள், சிறுதானியங்கள், சுற்றுச்சூழல் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து இந்த ஒரு நாள் கருத்தரங்கு நிச்சயமாக அடுத்த தலைமுறை விவசாயம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.