August 21, 2017
தண்டோரா குழு
மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பிரிந்து இருந்த அதிமுக இரு அணிகளும் இன்று இணைந்தது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் வந்துள்ளனர்.
செந்தில்பாலாஜி,தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள், ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்க டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.