June 7, 2017 தண்டோரா குழு
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.௦6 சதவீதம் பெற்ற மாணவர் ஜெயின் துறவியாக மாற முடிவெடுத்தது பலரை ஆச்சரியத்தை தந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் வர்ஷில் ஷா(17). இவர் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.௦6 சதவீதம் பெற்றார். அவருக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பவில்லை மாறாக வெள்ளை ஆடை உடுத்தி, ஜெயின் துறவுற வாழ்கையை பின்பற்ற விரும்புகிறார். ஜெயின் ஆசாரியர்கள் முன் நிலையில், சுரத் நகரில் வியாழக்கிழமை(ஜூன் 8) நடைபெறும் டிக்ஷா என்னும் பூஜை மூலம் தன்னை ஜெயின் துறவியாக அர்பணிக்க உள்ளார்.
இது குறித்து வர்ஷில் ஷா கூறுகையில்,
“என்னுடைய குடும்ப செல்வாக்கு, என்னை சிறு வயது முதல் ஜெயின் மதத்தின் மீது ஈர்ப்பை தந்தது. என்னுடைய குரு கல்யாண் ரத்னாவிஜய்சூரி மகாராஜ் என்னை ஊக்குவித்தார். தற்போது 32 வயதுடைய அவர், என்னுடைய வயதில் ஜெயின் துறவியானார். நான் அவருடன் நேரம் செலவழித்தபோது, சமகால பிரச்சனை பற்றியும், அது ஜெயின் மதத்துடன் எப்படி தொடர்புடையது என்பதையும் தெரிந்துக்கொண்டேன். ஜெயின் துறவியாக வேண்டும் என்னும் என்னுடைய முடிவை பலப்படுத்தியது. கோடி கணக்கான மக்கள் தேடும் நீண்ட கால மகிழ்ச்சியை உலகம் தராது”.
என்று கூறினார்.
இது குறித்து வர்ஷில்ஷா உறவினர்கள் கூறுகையில்,
” ஜெயின் துறவியாக போவதில் ஷா தீர்மானகாக இருந்தான். சிறு வயது முதல், தனது மத வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்து, ஒரு எளிய வாழ்கையை வாழ்ந்து வந்தான் என்று கூறினர்.