September 16, 2017 தண்டோரா குழு
ஜெர்மனியில் 1௦ கலைஞர்கள் சேர்ந்து 55 அடி உயரம் கொண்ட உலகின் உயரமான மணல் கோட்டையை கட்டி உலக சாதனை படைத்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டின் டுயச்பெர்க் நகரில் 55அடி உயரம், 17 மீட்டர் உயரம் கொண்ட மணல் கோட்டை மூன்றரை வாரங்களில் கட்டப்பட்டது. இந்த மணல் கோட்டையை கட்ட சுமார் 3,860 டன் மணல்கள் தேவைப்பட்டன. 55அடி உயரம் கொண்ட இந்த மணல் கோட்டைதான், உலகிலேயே மிகப்பெரிய மலைக்கோட்டை என்று கின்னஸ் உலக சாதனை ஜூரி செப்டம்பர் 1ம் தேதி, கூறினார்கள்.இந்த மணல் கோட்டையை வரும் 29ம் தேதி வரை மக்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம், இந்திய கலைஞரான சுதர்சன் பட்நாயக் 48 அடி உயரம் கொண்ட மணல் சிற்பத்தை உருவாகி உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.