• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெர்மன் நாட்டு தம்பதியினரின் நாயை திருடிய சென்னை திருடர்கள்

July 11, 2017 தண்டோரா குழு

ஜெர்மன் நாட்டு தம்பதியினரின் நாய் சென்னையில் திருடப்பட்டது, அதனை தேடும் முயற்சியில்
அந்த தம்பதியினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஸ்டேப்பான் மற்றும் அவருடைய மனைவி ஜானின் விடுமுறைக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளை சுற்றிபார்த்து விட்டு, வெள்ளிக்கிழமை(ஜூலை 7) சென்னைக்கு வந்துள்ளனர்.

சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்த அவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, அவர்களது நாய் லூக்கிற்கு நல்ல காற்றோட்டம் தேவை என்று அதை வெளியே கட்டிவிட்டு, அவர்கள் வாகனத்திற்குள் அமர்ந்து உள்ளனர். அப்போது, லூக்கின் காலரை யாரோ அறுத்துவிட்டு, அதை ஒரு ஆட்டோவில் தூக்கி சென்றுவிட்டனர்.

“கடந்த ஜூன் மாதம், நாங்கள் கிரீஸ் நாட்டில் விடுமுறையை செலவழித்தபோது, ஒரு வாகனத்திற்கு அடியில் பரிதாபமாக அமர்ந்திருந்த லூக்கை கண்டுபிடித்தோம். பாம்பு கடியில் இருந்து எங்களை லூக் காப்பற்றியது. பனி புயலில் காணாமல் போன எங்களை மீண்டும் ஒன்று சேர்த்தது. அதன்பிறகு லூக் எங்கள் குடும்பத்தில் ஒன்றாகிவிட்டது.

லூக் திருடப்பட்ட சம்பவத்தை காவல்நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமாரா இல்லை என்று கூறி எங்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். லூக் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்நியர்களிடம் அன்போடு பழகும். அதை நல்ல முறையில் பாதுகாத்து கொண்டு, அதுக்கு நல்ல உணவு வழங்கவேண்டும் என்று விரும்புகிறோம் என்று ஸ்டேப்பான் தெரிவித்தார்.

அந்த தம்பதியினர் லூக்கை தேடிக்கொண்டிருந்தபோது, மக்கள் பணத்திற்காக தங்களை ஏமாற்றி விடுவார்கள் என்பதற்காக அதனுடைய அனைத்து அடையாளங்களை முதலில் வெளியிடவில்லை. ஆனால், தற்போது லூக்கின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையை சுற்றிபார்த்த பிறகு இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது, அந்த திட்டத்தை ரத்து செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் அவர்களுடைய விசா முடிவடைகிறது. அதுவரை சென்னையில் இருந்து லூக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க