October 27, 2022 தண்டோரா குழு
கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் உள்ள ஜெ.எஸ்.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி கட்டிடங்களை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்க உள்ளார்.
கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஜெ.எஸ்.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி கட்டிடங்களின் திறப்பு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில்,ஜெ.எஸ்.எஸ்.கல்வி குழுமங்களின் இயக்குனர் மகேஷ், உதகை ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியின் முன்னால் அட்மின் புட்டராஜப்பா,கல்லூரி முதல்வர் மற்றும் தலைமை மருத்துவ அலுவலர் திலீப்,அட்மின் சண்முகம் ஆகியோர் பேசினர்.விழாவில், சுத்தூர் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ வீர சிம்மாசன மஹா சமஸ்தான மடத்தின் 24வது மடாதிபதியும், ஜெ.எஸ்.எஸ் மஹாவித்ய பீடத்தின் தலைவருமான பரமபூஜ்ய ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா சுவாமிஜி முன்னிலை வகித்து புதிய மாணவர் விடுதி கட்டிடங்களை, மாண்புமிகு தமிழக ஆளுநர் .ஆர்.என்.ரவி அவர்கள் திறந்து வைப்பதாக தெரிவித்தனர்.
மேலும் விழாவில். பொள்ளாச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் , கிணத்துக்கடவு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் , மற்றும் தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். சுதா சேஷய்யன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்..மேலும் ஜெ.எஸ்.எஸ் மஹாவித்யபீடத்தின் பிற முக்கிய பிரமுகர்களும் இவ்விழாவில் பங்கேற்பதாக கூறினர்.
புதிய மாணவர் விடுதி கட்டிடங்கள் 79,000 சதுர அடியில், 500 மாணவிகள் தங்கக்கூடிய, 152 அறைகளை கொண்டதாகவும், 33,000 சதுர அடியில் சுமார் 200 மாணவர்கள் தங்கக்கூடிய. 60 அறைகளுடைய, கட்டிடங்களாகும். மாணவர்களின் பயன்பாட்டை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்காக, நவீன மையப்படுத்தப்பட்ட, சுகாதாரமான சமையலறை பொருத்தப்பட்ட உள்கட்டமைப்பு அமைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.