September 6, 2017
தண்டோரா குழு
ஜெயலலிதா நினைவிடத்தில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டும் மாணவர்கள் போராட்டம்.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.