December 20, 2017 தண்டோரா குழு
ஜெயலலிதாவின் மரணத்தையே அரசியலுக்கு பயன்படுத்தும் அளவுக்கு கீழ்த்தரமாக இருப்பார்கள் என நினைக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,
“ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை நானும் பார்த்தேன்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பல தகவல்கள் வந்தன. அப்போதே கருணாநிதிசிகிச்சை வீடியோவை வெளியிடக் கேட்டிருந்தார்; அது வெளியிட்டிருந்தால் மக்கள் குழப்பம் தீர்ந்திருக்கும்.ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தையே கீழ்த்தரமாக அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
வீடியோ உண்மையோ, பொய்யோ அதில் தான் தலையிட விரும்பவில்லை, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்குஓட்டுக்கு ரூ.6,000 ஆளுங்கட்சியினர் கொடுப்பதை போலீஸ் வேடிக்கை பார்க்கிறது.தற்போது வீடியோ வெளியீடு விவகாரத்தில் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்”.இவ்வாறு அவர் கூறினார்.