July 18, 2017
தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க கோரிக்கை வலுத்துள்ள சூழலில் அப்போலோ மருத்துவமனை தலைவர்பிரதாப் ரெட்டி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் அதை எதிர்கொள்ள தயார் என்றும் அதற்கான அனைத்து ஆவணங்களும் தயாராக இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும், சிகிச்சையின் போது எந்த தலையீடும் இல்லையென்றும், மருத்துவர் குழு தேர்வுக்கான ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் பிரதாப் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்தார்.