• Download mobile app
22 Dec 2024, SundayEdition - 3238
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜேகே டயர் நோவிஸ் கோப்பை கார் பந்தயம் :முதலிடம் பிடித்து வெற்றிவாகை சூடினார் லிரோன் ஜேடன் மொமண்டம்

December 21, 2024 தண்டோரா குழு

கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற ஜேகே டயர் நோவிஸ் கோப்பை கார் பந்தயத்தில் 5 போட்டிகளில் மொத்தம் 37 புள்ளிகள் எடுத்து டிடிஎஸ் ரேசிங் அணியைச் சேர்ந்த லிரோன் ஜேடன் சாமுவேல் முதலிடம் பிடித்து வெற்றிவாகை சூடினார்.

இதேபோல் அணியைப் பொறுத்தவரை மொமண்டம் மோட்டார்ஸ்போர்ட் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்த அணியைச் சேர்ந்த ஆதித்யா பட்நாயக் 31 புள்ளிகளை எடுத்தார்.லிரோன் மற்றும் ஆதித்யா பட்நாயக் இருவரும் ஒரே நாளில் வியத்தகு சாதனையை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள்.

உண்மையில்,ஆதித்யா பட்நாயக் மூன்று போட்டிகளில் வெற்றியைப் பெறுவதற்காக அன்றைய நான்காவது மற்றும் கடைசி பந்தயத்தில் சிறப்பாக காரை ஓட்டினார். ஆனால், நான்காவது பந்தயத்தில் ஜம்ப் ஸ்டார்ட் செய்ததற்காக 10 வினாடிகள் பெனால்டி விதிக்கப்பட்டது, அது அவரை நான்காவது இடத்திற்கு தள்ளியது.

இதன் காரணமாக புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த லிரோன் , முதலிடத்திற்கு முன்னேறினார்.அது அவரது புள்ளிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தியது.இருப்பினும்,மொமெண்டம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணி 63 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

அதேசமயம் டிடிஎஸ் ரேசிங் அணி வீரர்கள் கடுமையாக போராடியும், இரண்டு புள்ளிகள் குறைவாகவே பெற்றது. இதேபோல் எம்ஸ்போர்ட் அணியின் பெங்களூரைச் சேர்ந்த 16 வயது அபய் 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடினார் . நேற்று நடைபெற்ற 5 போட்டிகளில் 3 வது போட்டியில் முதலிடம் பிடித்தார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த லிரோன் மற்றும் அவரது டிடிஎஸ் ரேசிங் அணி வீரர் பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகித் எல்.ரவி முதல் பந்தயத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். நேற்று நடைபெற்ற போட்டியில் லிரோன் முதல் மற்றும் நான்காவது போட்டியில் முதலிடம் பிடித்தார்.

இரண்டாவது பந்தயத்தில் ஆதித்யா ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடினார். இருப்பினும்,அவர் அபயிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டார், அவருக்கு அதிக அழுத்தம் இருந்தபோதிலும் , இரண்டு மற்றும் ஐந்தாவது போட்டியில் முதலிடம் பிடித்தார்.

மேலும் படிக்க