• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜேடி கல்வி நிறுவனம், ஐலேர்னிங்இன்ஜின்ஸ் உடன் விவேகானந்தா கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

October 14, 2022 தண்டோரா குழு

கோவை ஜேடி கல்வி நிறுவனம், அமெரிக்காவின் ஐலேர்னிங் இன்ஜின்ஸ் (iLearningEngines), விவேகானந்தா கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து திருச்செங்கோட்டில் மாணவர்களுக்காக AI கல்வி தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

திருச்செங்கோடு, எளையம்பாளையம், விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தலைவர் டாக்டர் எம்.கருணாநிதி, நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.குப்புசாமி,முதல்வர் டாக்டர் எம்.தேவி, கணினித் துறைத் தலைவர் டாக்டர் கே.பொற்கொடி ஆகியோர் விவேகானந்தா கல்வி குழும நிறுவனங்கள் சார்பில் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் ஐலேர்னிங்இன்ஜின்ஸ் தலைவர் மற்றும் சிபிஓ பாலகிருஷ்ணன், கோவை ஜேடி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிஇஓ சம்ஜித் தன்ராஜன், சேனல் பார்ட்னர்ஷிப் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவின் இயக்குநர் செரியன் கே பிலிப் ஆகியோரும் பங்கேற்றனர்.புதிய மற்றும் புதுமையான வடிவங்களை ஆசியாவின் மிகப்பெரிய பெண்களுக்கான கல்வி நிறுவன மாணவர்களுக்கு வழங்குவதற்காக iLearningEngine’s (iLE) கற்றல் ஆட்டோமேஷன் தளம் வாய்ப்பு வழங்கும். ஆசிரியர்கள், கற்றல் சூழலுக்கு உதவும் பணியை ஆற்றும். இந்த ஒருங்கிணைப்பு ஜேடி கல்வி நிறுவனத்தின் மூலம் முன்முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிய கல்வி நிறுவனமாக கடந்த 1992-ல் நிறுவப்பட்ட விவேகானந்தா கல்வி நிறுவனம் இன்று 21 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியுடன் பரந்து விரிந்துள்ளது. இக்குழுமத்தில் 20 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்வி நிறுவனங்களில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பட்டதாரிகளாக வெளியேறி உள்ளனர்.

“சமூக நலனுக்காகவும், பொருளாதார ரீதியாக சவால்களை சந்திக்கும் ஏழை மாணவர்களுக்காக இந்நிறுவனம் நிறுவப்பட்டது. 80 சதவீதம் பேர் கிராமப்புறப் பெண்கள். இவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றார்.

விவேகானந்தா கல்வி குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கருணாநிதி,இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை ஒரு முழுமையான மறுசீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பைக் குறிக்கிறது. உயர்கல்வி சுற்றுச்சூழலை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு ஆற்றல் அளிக்கும். இந்த கொள்கையின் செயல்வடிவம் தான் விவேகானந்தா கல்வி குழும நிறுவனத்தினுடான கூட்டாண்மையின் அடையாளம் என்று விவேகானந்தா கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.குப்புசாமி கூறினார்.

கல்வி மூலம் பெண்களை மிகப்பெரிய சக்தியாக மாற்றுவதற்காகத் தான் விவேகானந்தா கல்வி குழுமம் துவக்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கற்றல் வாய்ப்புகள் தரவே இவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்று ஐலேர்னிங்இன்ஜின்ஸ் தலைவர் மற்றும் சிபிஓ பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க