March 21, 2025
தண்டோரா குழு
கோவை காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கணினி அறிவியல் டீன் டாக்டர் டி.பழனிக்குமார் வரவேற்புரை வழங்கினார்.டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி தலைமை வகித்து பேசினார்.நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் கோயம்புத்தூர் மையத் தலைவர் மாயா ஸ்ரீகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர்,
தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.நீங்கள் இன்று கற்றுக் கொண்ட மென்பொருள் கருவிகள் நாளை மாற்றமடையலாம்.தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்.புதிய கண்டுபிடிப்புகளுக்கு திறந்த மனதுடன் இருங்கள் என்றார்.
கவுரவ விருந்தினராக கோவை சிவா டெக்ஸ்யார்ன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரராமன் கே.எஸ். ஆகியோர் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாவின் சிறப்புரை ஆற்றினர்.
அப்போது அவர்,உங்கள் எதிர்கால பாதையில் வாய்ப்புகளும்,சவால்களும் இருக்கும்.அவற்றை தன்னம்பிக்கையுடனும், உறுதிப்பாட்டுடனும் எதிர்கொள்ளுங்கள் என்றார்.
ஆண்டறிக்கையை,என்ஜிபி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.யு.பிரபா வாசித்தார்.டாக்டர் என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் கல்லூரிச் செயலாளரும் அறங்காவலருமான டாக்டர் தவமணி, டி.பழனிசாமி,டாக்டர்.என்.ஜி.பி.கல்வி குழுமங்களின் அறங்காவலர் டாக்டர் அருண் என். பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள்,பேராசிரியர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.