• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாக்டர் சரோஜினி அகர்வாலுக்கு நீரஜா பானட் விருது

September 7, 2017 தண்டோரா குழு

சண்டிகரில் ஆதரவற்ற பெண்களுக்காக ‘மனிஷா மந்திர்’ என்னும் இல்லத்தை நடத்தி வரும் டாக்டர் சரோஜினி அகர்வாலுக்கு ‘நீர்ஜா பானோத்’ விருது வழங்கப்படுகிறது.

கடந்த 1986ம் ஆண்டு, பான் அமெரிக்கா விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த விமானத்தில் பணிபுரிந்த நீரஜா பானட், பயணிகளை காப்பாற்றினார். ஆனால், தீவிரவாதிகள் நீர்ஜாவை சுட்டுக்கொன்றனர். அவருடைய வீர செயலின் நினைவாக ‘நீரஜா பானட் விருது’ ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, இவ்வாண்டு அந்த விருதை டாக்டர் சரோஜினி அகர்வால் பெறுகிறார்.இவர் கடந்த 1978ம் ஆண்டு, ஒரு விபத்தில் தன்னுடைய 8 வயது மகளை பரிதாபமாக இழந்தார். மகளை இழந்த துக்கத்தில் இருந்தாலும், ஆதரவற்ற பெண்களை கவனித்து கொள்வது என்று முடிவெடுத்தார்.

இதனையடுத்து, ‘மனிஷா மந்திர்’ என்னும் இல்லத்தை தொடங்கினார். ஆனால், தொடக்கத்தில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு, கடந்த 1986ம் ஆண்டு, செப்டம்பர் 24ம் தேதி முதன் அந்த இல்லம் வெற்றிகரமாக செயல்பட துவங்கியது.

தற்போது அந்த இல்லத்தில் சுமார் 7௦௦ பெண்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, ஆகியவை மற்றும் கிடைப்பதில்லை, மாறாக அன்பும் கவனிப்பும் கிடைக்கிறது.

சரோஜினியின் இந்த தன்னலமற்ற செயலுக்காக, ‘நீரஜா பானட்’ வழங்கப்பட இருக்கிறது.இவ்விருதினை ஹரியானா ஆளுநர் கப்டன் சிங் சோலங்கி வழங்குகிறார். இந்த விருதுடன் ரூ 1,5௦,௦௦௦ ரூபாய் பரிசு தொகையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க