• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாக்ஸி நடமாடும் நூலகமான கதை.

May 2, 2016 தண்டோரா குழு

சாஹேல் பில்சூப், ஈரானில் ராஷ்ட் நகரில் டாக்ஸி ஓட்டிப் பிழைப்பு நடத்துபவர். அவர் ஒரு புத்தக பிரியரும் கூட. வாசித்தல் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.

டாக்ஸி ஒட்டிய மீதி நேரத்தில் புத்தகங்கள் வாசிப்பது அவரது வாடிக்கையான செயல். வயிற்றுப் பிழைப்புக்கு டாக்ஸி ஓட்டுவதும், ஆத்மா திருப்திக்கு வாசிப்பதுமாக இவராது வாழ்க்கை சென்றுகொண்டு இருந்தது.

புத்தகங்களைப் படிப்பதால் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியும் என்று சாஹேல் பில்சூப் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இவ்வாறு தாம் வாசித்த புத்தகங்களை எல்லாம் அவர் சேர்த்து வைத்துள்ளார்.
மேலும், தாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று நினைத்து, தனது டாக்ஸியில் பயணம் செய்வோரும் வாசித்து பயன் பெற வேண்டும் என நினைத்தார்.

இதற்காகத் தனது டாக்சியில் ஒரு சிறிய நூலகம் வடிவமைத்து அதில் தான் படித்த நூல்களை அழகாக அடுக்கி வைத்துள்ளார். இவ்வாறு தனது டாக்ஸியை நடமாடும் நூலகமாக மாற்றியுள்ளார்.

ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் நீண்ட நாட்களாக தனக்குள் வேரின்றி இருந்ததாகவும் மக்கள் புத்தகங்களை படிப்பதால் அவர்களுக்கு மன அமைதி கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 50 துறைக்கான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் சரித்திர புத்தகங்கள் அவருடைய நடமாடும் நூலகத்தில் காணப்படுகிறது. பெண்களும், வாலிபர்களும் இவருடைய நூலகத்தின் ரசிகர்களாக உள்ளனர்.

ஈரான் நாட்டில் வடக்கு மாகாணமான கிலன்னில் உள்ள பொது நூலகத்தின் அதிகாரிகளைச் சந்தித்த அவர் தன்னுடைய நடவடிக்கையை ஆதரிக்க அவர்களின் உதவியை நாடினார். அவர்களும் அதற்கு இசைந்து அவருடைய நடமாடும் நூலகத்தின் தரத்தை உயர்த்தப் பல நூல்களை வழங்கி உள்ளனர்.

ஒருவர் தன்னிடம் வந்து ஒரு புத்தகத்தை தருமாறு கேட்கும் போது, தான் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டதாக அவர் பெருமை படுவதாகக் கூறுகிறார்.

மேலும் படிக்க