August 25, 2022 தண்டோரா குழு
வேகமாக வளர்ந்து வரும் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் (டாடா ஏஐஏ) 2022 நிதியாண்டில் பங்குபெறும் தகுதியுள்ள அனைத்து பாலிசிதாரர்களுக்கும் ரூபாய் 861 கோடி ரூபாய் போனஸை அறிவித்தது. இது தொடர்ச்சியான 5வது ஆண்டு போனஸ் செலுத்துதல் ஆகும், மேலும் நிதியாண்டு 2021 இல் செலுத்தப்பட்ட போனஸை விட 20 சதம் அதிகமாக உள்ளது.
வலுவான நிதி மேலாண்மை திறன்களுடன் சேர்ந்த வலுவான இடர் மேலாண்மை நடைமுறைகள்,பங்குபெறும் பாலிசிதாரர்களுக்கு, அதிக போனஸ{டன் தொடர்ந்து வெகுமதி அளிக்க, இந்த நிறுவனத்திற்கு உதவியது, இது நுகர்வோர் தங்கள் நிதி இலக்குகளை அடைய உதவுவதில் பங்குபெறும் தயாரிப்புகளின் செயல்திறனை வெளிப்படுத்துகிறது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த டாடா ஏஐஏ லைப் இன் தலைமை நிதி அதிகாரி சமித் உபாத்யாய்,
“டாடா ஏஐஏ இல், எங்கள் நுகர்வோரின் நீண்ட கால நிதி நல்வாழ்வே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் முக்கியமாக இருக்கிறது, மேலும் அவர்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே எங்கள் முயற்சியாகும். எங்களின் நீண்ட கால நிதி மேலாண்மை தத்துவம் மற்றும் விவேகமான முதலீடு மற்றும் இடர் மேலாண்மை கொள்கைகள் எங்கள் நுகர்வோருக்கு வலுவான போனஸை அறிவிக்க உதவியது.
இது அவர்களின் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால சேமிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீண்ட தூரம் செல்லும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்களின் உயர் தரமதிப்பீடு மற்றும் நுகர்வோர் நட்பு காப்புறுதி தீர்வுகள் மூலம் எங்கள் நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க மதிப்பை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.
மார்ச் 31, 2022 நிலவரப்படி, மார்னிங்ஸ்டார் மதிப்பீடுகள் மூலம் டாடா ஏஐஏ இன் மதிப்பிடப்பட்ட எயூஎம் இல் 99.83 சதம் 5 ஆண்டு அடிப்படையில் 4 நட்சத்திரங்கள் அல்லது 5 நட்சத்திரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில், அனைத்து நிதிகளிலும் சேர்த்து, இந்த நிறுவனம் ரூபாய் 4,455 கோடிகளின் இண்டிவிஜுவல் வெயிட்டெட் நியூ பிசினஸ் பிரீமியம் வருமானத்தை பதிவு செய்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான ரூபாய் 3,416 கோடி உடன் ஒப்பிடும்போது 30 சதம் வளர்ச்சயைக் கொண்டுள்ளது.