February 21, 2017
தண்டோரா குழு
டாடா தொழிற்குழுமத்தின் புதிய தலைவராக என். சந்திரசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்ட நிலையில் ரத்தன் டாடா கடந்த மூன்று மாதங்களாக,தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் டாடா குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த அதிகாரிகளில் ஒருவரான சந்திரசேகரன், துல்லியமான வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர் எனக் கூறப்படுகிறது.மேலும் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸின் தலைமைப் பொறுப்பையும் சந்திரசேகரன் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.