April 18, 2023
தண்டோரா குழு
கோவை காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806 ல் செந்தில்குமார் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று பணியில் இருந்த சமயத்தில், விற்பனையின் போது பீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளார். அப்போது பீர் பாட்டில் வெடித்துள்ளது. இதில் அவரது இடது கண்ணில் உடைந்த பாட்டில் துண்டு பட்டு கடும் பாதிக்கப்பட்டு ஏற்பட்டுள்ளது.செந்தில்குமார் தற்போது கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை கோவை மாவட்ட மேலாளர் [ வடக்கு ] நேரில் சென்று உடல் நலம் விசாரித்து சென்றார். இச்சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.