October 31, 2017 தண்டோரா குழு
‘டாஸ்மாக்’ கடைகளில் அனைத்திலும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு நடத்தும் 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகளில் தினமும் சுமார் ரூ. 70 கோடி வரை, மது வகைகள் விற்பனையாகின்றன.தற்போது வரை இவை ரொக்க பண பரிவர்த்தனை முறையில் நடக்கின்றது.
மேலும்,‘டெபிட், கிரெடிட் கார்டு’ வாயிலாக, பணம் செலுத்தும் முறை சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள நவீன டாஸ்மாக் கடைகளில் குறைவாக பயன்படுத்தப்படுகின்றன.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தின் மூலம்,டாஸ்மாக் ஊழியர்கள், அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்கலாம்.மேலும்,செல்லாத ரூபாய் நாடுகள் டாஸ்மாக் மூலமாக மாற்றப்படுவதை தடுக்கலாம்.மேலும்,டாஸ்மாக் வங்கி கணக்கில், உடனே பணம், டிபாசிட் ஆவதுடன், கொள்ளை, கூடுதல் விலை போன்ற, முறைகேடுகள் நடக்காது என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார்.