April 18, 2022 தண்டோரா குழு
கோவையில் பொது இடத்தில் உள்ளா டாஸ்மாக் கடையால் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் என்று மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சுந்தராபுரம் சாரதாமில் சாலையில் மதுபான கடை எண் 1756 செயல்பட்டு வருகிறது.
இந்த மதுக்கடைக்கு எதிரில் திரையரங்கம் உள்ளது. ஏற்கனவே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த இடத்தில் மது கடையும் இருப்பது மிகவும் ஆபத்தாக உள்ளது.இந்த பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் இந்த மதுக்கடையை அகற்றக்கோரி திமுக.,வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.ஆனால் தற்போது அமைதி காக்கின்றனர்.எனவே இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.