July 17, 2017
தண்டோரா குழு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆர்.அனிதா என்பவர் சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாற்றினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று அவர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், டிஐஜி ரூபாவை தொடர்ந்துபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆர்.அனிதா என்பவர் சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.