May 30, 2017 தண்டோரா குழு
சர்வதேச மாதவிடாய் சுகாதார நாளை முன்னிட்டு இந்தியாவின் முதல் சானிட்டரி நாப்கின் டிஜிட்டல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே 28ம் தேதி சர்வதேச மாதவிடாய் சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாககும்.
இதனை முன்னிட்டு இந்தியாவின் முதல் சானிட்டரி நாப்கின் டிஜிட்டல் வங்கி தொடங்கப்பட்டது. பாஜக எம்எல்ஏ, பாரதி லவேகர் என்பவரால் தொடங்கப்பட்டுள்ள டிடிஇ பவுண்டேஷன் (TEE foundation) என்னும் தொண்டு நிறுவனம் மூலம் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.மஹாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் நடிகை ஜீனத் அமான் ஆகியோர் டிஜிட்டல் நாப்கின் வங்கி துவக்க விழாவில் கலந்துகொண்டனர்
இந்த நாப்கின் வங்கி முயற்சி குறித்து பேசிய பாரதி லவேகர்
“இந்த முயற்சி சுமார் ஓர் ஆண்டு காலமாக நடந்து வருகிறது. மாதவிடாய் ஏற்படும் நேரத்தில் துணி, இலை போன்றவற்றை பயன்படுத்துவதால் பெண்களுக்கு சேர்விகள் கேன்சர் (Cervical Cancer) ஏற்படுகிறது. அதனால் தான் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் உபயோகம் அவசியமாக இருக்கிறது.
பழங்குடி மற்றும் ஜில்லா பரிஷத் பள்ளிகளுக்கும் இந்த டிஜிட்டல் வங்கியின் சேவைகள் ஏற்கனவே, இரண்டு மாத விடுமுறை நீங்கலாக, மத்திய அரசு பத்து மாதங்கள் வரை இந்த பள்ளிகளுக்கு நாப்கின்களை இலவசமாக வழங்கி வருகிறது.
எனினும், கிராமத்தில் இருப்பவர்கள் http://teefoundation.in/ இந்த தளத்தில் பதிவு செய்துகொண்டால், இரண்டு மாதங்களுக்கும் நேப்கின்களை அளிக்கிறோம்” என்று கூறினார்.
தேவைபட்டோருக்கு சரியான நேரத்தில் நாப்கின்கள் சென்று அடையும். மாதவிடாய் குறித்து மக்களிடையே உள்ள தவறான கண்ணோட்டத்தை நாம் மாற்றவேண்டியது அவசியம்” என்று கூறினார்.