July 13, 2017
தண்டோரா குழு
பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மின் ஆவண காப்பகம் (டிஜிட்டல் லாக்கர்) மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் லாக்கர் எனப்படும் மின் ஆவணக் காப்பகம் மூலம் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மின்னணு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி www.digilocker.gov.in என்ற தளத்தில் மாணவர்கள் கணக்கை தொடங்கி பதிவிறக்கம் செய்யலாம்.
கணக்கை தொடங்க மாணவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணை பயன்படுத்த வேண்டும். ஆதார் எண்ணுடன் அலைபேசி எண் இணைக்கப்படவில்லை என்றால் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி இணைத்துக் கொள்ளலாம்.
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு மின்னணுச் சான்றிதழை இணையதள வழியாகவே சமர்ப்பிக்க இந்தமுறை உதவும்.மேலும், மின்னணு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்க முறைகளை அறிய www.dge.tn.gov.in என்ற தளத்தில் மாணவர்கள் அறியலாம்.