• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிஜிட்டல் வடிவிலான போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி – பார்க் கல்லூரி உலக சாதனை !

February 6, 2024 தண்டோரா குழு

உலக சாதனையாக போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த, கோவை மாநகர காவல் துறை மற்றும் பார்க் கல்வி நிறுவனங்கள் இணைந்து டிஜிட்டல் வடிவிலான போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை அதிக அளவில் மாணவர்கள் ஏற்றுக் கொண்டு, உலக சாதனை படைத்தனர்.இதில் மாணவ மாணவியர்கள் டிஜிட்டல் வடிவில் உறுதிமொழி அளித்தனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை பார்க் கல்வி குழுமங்களின் பரப்பரையாளர் சுந்தரராஜன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி தலைமை வகித்து பேசினார். பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி முன்னிலை வகித்து பேசியதாவது:- .

இந்த உலக சாதனை நிகழ்வில் மொத்தம் 1,37,294 மாணவர்களிடம் உறுதிமொழிகள் பெறப்பட்டதில்,1,12,375 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.இந்த முயற்சியையும் பதிவையும் உலக பதிவு யுனியன் ஏற்றுக் கொண்டு,உலக சாதனையாக அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக பதிவு யுனியன் இன்று 2024 பிப்ரவரி 6ம் தேதி;இதற்கான சான்றை நமக்கு அளித்துள்ளது.

இந்த சாதனை முயற்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 180 கல்லூரிகள் பங்கேற்றன.சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான 2023 ஜூன் 26 ல் இந்த இயக்கம் துவக்கப்பட்டது.டிஜிட்டல் வடிவில் உறுதியேற்பு 2023 செப்டம்பர் 12-ம் தேதி துவக்கப்பட்டது. 2024 ஜனவரி 31-ம் தேதி நிறைவு பெற்றது. 2023 டிசம்பர் இறுதியில் ஒரு லட்சம் உறுதியேற்பை எட்டியது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் உலக சாதனை யுனியன் பிரதிநிதி கிரிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் கலந்து கொண்டு சான்றிதழை கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் முன்னிலையில் பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவியிடம் சான்றிதழை வழங்கினார்.
இந்த சாதனை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்ற கல்லூரிகளை கோவை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் பாராட்டி பேசியதாவது:- தலைமை என்பது மிக முக்கியமானது. நமக்குள் அனைத்தும் சமநிலையில் இருக்க வேண்டும்.

நிலைத்தன்மையும் இருக்க வேண்டும். சில திரைப்படங்கள், பல தவறான வழிகாட்டுதல்களையும் போதிக்கின்றன. நல்ல கருத்துக்களை மனதில் அவை விதைக்க வேண்டும்.கோவை மாநகரில் பல்வேறு விதங்களில் போதை பொருட்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அவற்றை கண்டுபிடித்து தடுத்து வருகிறோம்.போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஒழிப்பதை விட, அது வரும் முன்பே தடுப்பது மிக அவசியம். போதை பொருள் பக்கமே செல்லாமல் இருக்க மாணவர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

உள்ளத்தில் உறுதி ஏற்பதால், உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கோவையில் போதை பொருட்கள் நுழையாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் இவ்வாறு பேசினார்.

இதில் பங்கேற்ற கல்லூரிகளை சேர்ந்த 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, போதை பொருள் இல்லாத கோவையின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவர். இவர்கள், மாணவர்களிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, போதை பொருட்கள் உள்ளனவா என்பதையும் கண்காணிப்பார்கள்.

மாணவர்களுக்கான ஹெல்ப்லைன் ஒன்றும் உருவாக்கப்படும். மேலும் விபரங்களுக்கு http://drugfreekovai.com இணையத் தளத்தை பார்வையிடலாம்.

மேலும் படிக்க