June 7, 2017
தண்டோரா குழு
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேற்று முதல் எம்எல்ஏக்கள் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது,
டிடிவி தினகரனை எம்எல்ஏக்கள் சந்திப்பதில் எந்த தவறும் இல்லை.சசிகலா தான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், தினகரன் தான் துணைப்பொதுச்செயலாளர். நேரம் வரும்போது டிடிவி தினகரனை நேரில் சந்திப்பேன்.தமிழகத்தில் பேரவை தேர்தல் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை.சில பிரச்னைகள் விரைவில் சரியாகிவிடும். இரு அணிகள் இணைய வாய்ப்புள்ளது. கட்சியில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.