August 4, 2017
தண்டோரா குழு
ஆக. 14-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும்சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து தனது பொதுக்கூட்ட சுற்றுப்பயனத்தை தொடங்க உள்ளதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்டர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக பொதுசெயலாளர் ஜெ.ஜெயலலிதா எண்ணிய படி, சசிகலாவின் திட்டமிட்டபடி, பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.