• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிரிக்கர் அப்பேரல்ஸ் புதுமை & வடிவமைப்பு பிரிவுடன் கோவை தலைமையகம் கேஜி ஹவுஸ்சில் துவக்கம் !

December 14, 2021 தண்டோரா குழு

டிரிக்கர் அப்பேரல்ஸ் புதுமை & வடிவமைப்பு பிரிவுடன் கோவை தலைமையகம் கேஜி ஹவுஸ்சில் துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1990 ல் துவங்கிய ஜீன்ஸ் அலை, 2000ம் ஆண்டில் இளைஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு பிராண்டுகள் உற்பத்தியானது. மாபெரும் சந்தையும் வந்தது. கடந்த தொற்று காலத்திலும் நேர்மறையாகவே திகழ்கிறது. ஆன்லைன் வசதியால் கருத்தரங்கு அறைகளில் நடந்த கூட்டம், படுக்கை அறைகளிலும், ஓய்வறைக்கும், தனி அறைகளுக்கும் மாறியது. வீடுகளிலிருந்து பணியாற்றும் வசதியால், புதிய விதிமுறைகள் வந்தன.

புதிய ஆடை அணிமுறைகளும் இதில் ஏற்படுத்தப்பட்டன. இந்த சமயத்தில், டிரிக்கர் ஜீன்ஸ் அணிபவர்கள், வசதியாகவும், பார்வைக்கு அழகாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என எண்ணியது. நல்ல தளர்வு தரும் வகையிலும், எளிமையகவும், அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் காற்றோட்டமாகவும் தயாரிப்புகள் இருக்க வேண்டும் என விரும்பியது. அதற்கான வடிவமைப்பையும், புதுமையையும் ஏற்படுத்தியுள்ளது.

கேஜி டெனிம் லிமிடெட்டின் டிரிக்கர் அப்பேரல்ஸ் லிமிடெட் (டிரிக்கர் ஜீன்ஸ்) தனது முதலாவது சர்வதேச தொடர்பு அலுவலகத்தை ஆண்களுக்கான அனைத்து வகையான ஆடை கலெக்சனுடன் கோவையில் துவக்க தயாரானது. டிரிக்கர், இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட விற்பனையகத்தை கொண்டுள்ளது. இதில் 80 பெரிய விற்பனையகங்கள் உள்ளன. சிங்கப்பூர், துபாய் மற்றும் மலேசியா உள்ளிட்ட நகரங்களில் 100க்கும் மேற்பட்ட தனித்துவமிக்க விற்பனையகங்களைக் கொண்டுள்ளன. புதிய நிறுவன தலைநகரை “விஷன் 2022” என்ற தொலைநோக்கோடு துவங்கியுள்ளது.

வரும் ஆண்டுகளில் ஏற்கனவே உள்ள விற்பனையகங்களுடன் 250 விற்பனையகங்களை திறக்கவும், 1000 க்கும் மேற்பட்ட விற்பனையகங்களை மேலாண்மை செய்யவும் மேம்படுத்தவும் இந்த தலைமையகம் செயல்படும். டிரிக்கர், அமெரிக்காவின் ஏபிஜி குழுமத்துடன் இணைந்துள்ளது. அங்கிருந்து “லக்கி பிராண்ட்” ஆக இந்திய சந்தையில் வலம் வரவுள்ளது.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிலையான தயாரிப்பை வழங்கவும், சந்தையில் இரண்டாவது மிகப்பெரும் உற்பத்தியாளராக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. தலைமயகத்தின் துவக்க விழா டிசம்பர் 14ம் தேதி, காலை 10.30 மணிக்கு நடந்தது. கோவை கேஜி ஹவுஸ்சில் நடந்த விழாவில், கோவை கே.ஜி குழுமத்தின் தலைவர் கே.ஜி பாலகிருஷ்ணன் மற்றும் சத்ய பாமா, கே ஜி டெனிம், நிர்வாக இயக்குனர் ஶ்ரீ ராமுலு மற்றும் பிரணவ், தலைவர், சீனிவாச கார்மெண்ட்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

கேஜி டெனிம் லிமிடெட்:

டிரிக்கர் 1994ம் ஆண்டில் துவக்கப்பட்டது. அதிநவீன நாகரீக ஆடைகளுக்கும், தரத்திற்கும், புதுமை படைப்பிற்கும் பெயர் பெற்ற ஆடைகளுக்கு டிரிக்கர் பெயர் பெற்றது. காலத்திற்கு ஏற்ற வகையில், ஜீன்ஸ், சட்டைகள், டிரவுசர்கள் மற்றும் டீ சர்டுகள் பல்வேறு அளவுகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக அளவற்ற வகையில் தயார் செய்துள்ளது.

டெனிம் வகை துணிகளில் முன்னணி இடம் பிடித்துள்ளது டிரிக்கர். கேஜி டெனிம் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ள டிரிக்கர், வசதியான, காலத்திற்கு ஏற்ற பெயர் பெற்ற ஆடைகளை தயாரித்து இந்தியாவின் முன்னணி உற்பத்தி நிறுவனமாக மாற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு உயர்தரத்திலான ஆயத்த ஆடைகளை வழங்குவேதாடு, உயர்ந்த சேவையாற்றி வருகிறது.

மேலும் படிக்க